பதிவு செய்த நாள்
19
நவ
2018
02:11
திருப்பூர்: பெரியாண்டிபாளையம் மாரியம்மன் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், 25ம் தேதி பொங்கல் பூச்சாட்டு விழா நடக்கிறது.திருப்பூர், பெரியாண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற
மாரியம்மன் கோவில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது, பொங்கல் பூச்சாட்டு விழா நடக்கிறது. இதற்கான, ஆலோசனை கூட்டம், கோவிலில் நேற்று (நவம்., 18ல்) நடந்தது.
விழாக்குழுவினர், பொதுமக்கள், போலீசார் பங்கேற்றனர். கூட்டத்தில், பெரியாண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், சின்னியகவுண்டன்புதூர் உட்பட 23 கிராம மக்களும் ஒற்றுமையாக இணைந்து, பூச்சாட்டு விழாவை பாதுகாப்பாக, சிறப்பாகவும் நடத்த வேண்டுமென, முடிவு செய்யப்பட்டது.
வரும் 25ம் தேதி இரவு, கிராம சாந்தியுடன், பூச்சாட்டு விழா துவங்குகிறது. அடுத்த மாதம், 3ம் தேதி விநாயகருக்கு பொங்கல் வைத்தல், 4ம் தேதி காலை, மாவிளக்கு ஊர்வலம், 5ம் தேதி
காலை, 7:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, பொங்கல் விழா, மாரியம்மன் மஹா தரிசனம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன.