பதிவு செய்த நாள்
23
நவ
2018
02:11
திருத்தணி : திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இன்று (நவம்., 23ல்), மாலை, 6:00 மணிக்கு, கார்த்திகைத் தீபம் விழாவையொட்டி, மகா தீபம் ஏற்றப் படுகிறது. இந்த தீபத் திருவிழாவிற்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று (நவம்., 22ல்) முதலே, செல்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, திருத்தணி, அரசுப் போக்குவரத்து பணிமனை சார்பில், நேற்று நவம்., 22 முதல், 12 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.