ஒலக்கூர் கிருஷ்ண சுவாமி திருக்கோவில் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2018 03:11
திண்டிவனம்: ஒலக்கூர் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா 25ம் தேதி நடக்கிறது.திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா இன்று (23ம் தேதி) துவங்குகிறது.
நாளை 24ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹூதி, மாலை 6:00 மணிக்கு மகா சாந்தி அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு கும்ப அபிஷேகம், மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.மறுநாள் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ பூஜை, காலை 8:45 மணிக்கு மகா சம்ரோஷணமும் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 2:00 மணிக்கு, கிருஷ்ண சுவாமிக்கு, திருக்கல்யாண வைபோகமும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு பெருமாள் வீதியுலா புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.