விழுப்புரம் தர்மசாஸ்தா கோவிலில் 25ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2018 03:11
விழுப்புரம்: விழுப்புரத்தில், தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக விழா, 25ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் நகராட்சி, எம்.குச்சிப்பாளையத்தில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் வரும் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள், கும்பாபிஷேக விழா நடக்கிறது. கோவை நவக்கரை நந்திக்கோவில் ராமானந்த சுவாமி முன்னிலையில், கடம் புறப்பாடு, மஹா கும்பாபேஷக நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வரதராஜ், சூரிய பிரகாஷ் குருக்கள் மற்றும் எம்.குச்சிப்பாளையம், அனிச்சம்பாளையம் பகுதி மக்கள் செய்துள்ளனர்.