மதுரை: ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு விரைந்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது, என, மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண் பிரசாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி புனித யாத்திரை பதிவுகள் துவங்கியுள்ளன. யாத்திரை செல்லும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன், போலீஸ் விசாரணை அறிக்கை கிடைக்க பெற்றதும் மிக விரைவாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மதுரை, திருநெல்வேலி சேவா கேந்திரத்தில் விண்ணப்பித்து ஹஜ் செல்வதற்கான விண்ணப்ப கடிதத்துடன் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப் பிக்கலாம்.ஆன்லைனில் முன்தேதி கிடைக்க தாமதமானால் தேவையான ஆவணங்களுடன் மதுரை பாரதி உலா வீதியிலுள்ள மண்டல அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்தேதி பெற்று குறிப்பிட்ட சேவை மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதற்காக தனி கவுன்டர் மற்றும் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் சம்பந்தமான குறைகளையும் தனி அதிகாரியிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்றார்.