பழநி : திருக்கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். சபரிமலை சீசன் காரணமாக, பழநி முருகன் மலைக்கோயிலுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் மூலம் மலைக்கு செல்வதற்கு இரண்டு மணி வரை வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயிலில் பொதுதரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வப்போது பெய்த மழையால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது. மழை நின்றபின் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது.