பதிவு செய்த நாள்
24
நவ
2018
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மதியம், 2:00 மணி முதல், 3:00 மணி வரை, 6,000 பேர் மட்டும் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்தாண்டு போலீசாரின் கடும் கெடுபிடியையும் தாண்டி, பக்தர்கள் மாலை, 4:30 மணி வரையிலும், முக்கிய பிரமுகர்கள், 5:15 மணி வரையிலும் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால்,கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை, 6:00 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர், பஞ்ச மூர்த்திகள் தரிசனத்துடன் மஹா தீபம் ஏற்றப்பட்டபோது, மலை மீது மேக மூட்டமாக இருந்ததால், 6:03 மணிக்கு மஹா தீபம் தெரிந்தது. பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.