புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேகம் வரும் 10 ம் தேதி நடக்கிறது.சித்தானந்தா கோவிலில் வரும் 10 ம் தேதி காலை 6 மணிக்கு சங்கு பிரதிஷ்டை நடக்கிறது. 6.30 மணிக்கு கணபதி ஹோமம் பின்னர் 9 மணிக்கு சித்தானந்தா சுவாமிக்கு மஞ்சள், பன்னீர், பால், மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு 108 சங்காபிஷேக மும், இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது. அபிஷேகத்திற்கு வேண்டிய பொருட் களை கொடுக்க விரும்பும் பக்தர்கள், 10ம் தேதி காலை 8 மணிக்குள் தேவஸ்தானத்தில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை தேவசேனாபதி குருக்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.