நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லூர் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் லட்சதீப பெருவிழா நேற்று (நவம்., 23ல்) நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லூர் கிராமத்தில், உள்ள மரகதவல்லி மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு, நேற்று (நவம்., 23ல்) மாலை 6 மணிக்கு, லட்சதீப பெருவிழா நடந்தது.இதையொட்டி, காலை 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு லட்சதீபம் ஏற்றப்பட்டது.
இதேபோல் மடுகரை மரக்காளீஸ்வரர், நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர், கோர்க்காடு எல்லையம்மன் கோவில்களில் லட்சதீப பெருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.