பவானி: தீபத்திருவிழாவை ஒட்டி, பவானி கோவில்களில், சொக்கப்பனை எரிப்பு நிகழ்வு, கோலாகலமாக நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், இரவு, 7:00 மணியளவில், சங்க மேஸ்வரர் சுவாமி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர். இதையடுத்து ராஜகோபுரத்தின் முன், பனை ஓலைகளாலான, சொக்கப்பனை எரிப்பு நடந்தது. இதேபோல் ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோவில், ஊராட்சிக் கோட்டை மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.