பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம்ம், நாளை (நவம்., 25ல்) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
முன்னதாக, இன்று (நவம்., 24ல்) காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜையுடன் யாகம் ஆரம்பம். 10:30 மணிக்கு முளைப்பாலிகையுடன் திருவீதி உலா; பகல், 12:00 மணிக்கு கோபுர கலச ஸ்தாபனம், மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மஹா சங்கல்பம். இரவு, 7:00 மணிக்கு முதற்கால யாக பூஜை ஆரம்பம், 108 மூலிகை ஹோமம் நடக்கவுள்ளது. நாளை (நவம்., 25ல்) காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாகம் பூஜை, காலை, 9:15 மணிக்கு தீபாராதனை, யாத்ரா தானம், கடம்புறம்பாடு; காலை, 10:00 - 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
தொடர்ந்து மஹா தாளிகை பூஜை, அன்னதானம், சக்தி அழைத்தல் நடக்கிறது.