பதிவு செய்த நாள்
24
நவ
2018
03:11
கரூர்: கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 44வது திருப்படி திருவிழா நடந்தது. வெங்கமேட்டில் இருந்து நேற்று (நவம்., 23ல்) காலை, 8:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள், பால் குடம், தீர்த்தக் குடம், காவடிகள் எடுத்துக் கொண்டு, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின், மலைக்காவலர் வழிபாட்டை தொடர்ந்து, திருப்புகழ் பாடி, படி பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.