பதிவு செய்த நாள்
26
நவ
2018
11:11
திருவண்ணாமலை : தீபத்திருவிழாவை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர், கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவில், 23ம் தேதி, மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது, வழி நெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு பூஜை நடந்தது. தை மாதம் நடக்கும் திருவூடல் திருவிழா மற்றும் தீப விழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு, இரு முறை மட்டுமே, அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். நேற்றிரவு, அய்யங்குளத்தில் நடந்த தெப்ப உற்சவத்தில், மூன்று முறை, பராசக்தி வலம் வந்தார்.