விழுப்புரம்: விழுப்புரம் அருகே எம்.குச்சிப்பாளையம் கண்டேன் தர்ம சாஸ்தா கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி காலை 10:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கணபதி ேஹாமம், பூர்ணாஹூதி மற்றும் மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், கும்பலங்காரம், முதல்கால யாக பூஜை நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்குமேல் 7:30 மணிக்குள் கடம் புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதில், மூலவர் தர்ம சாஸ்தா சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.