திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தில் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில் புதுபிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 23ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கி யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜையும், மாலை மகா சாந்தி யாகம், இரவு மூன்றாம் கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹூதிநடந்தது.நேற்று காலை கோபூஜை, யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, காலை8:45 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 2:00 மணிக்கு, கிருஷ்ணருக்கு, திருக்கல்யாண வைபோகமும், மாலை 4:00 மணிக்கு பெருமாள் வீதியுலா புறப்பாடு நடந்தது.