பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை மங்கள இசையுடன் அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமம், பூர்வாங்க பூஜை, பிரவேசபலி, மிருத்சங்கிரஹணம் தொடர்ந்து முதற்கால யாக பூஜை நடைபெற்றது.நேற்று காலை யாகபூஜை, கோ பூஜை, சூரிய கும்ப பூஜை, சிலைகளுக்கு வலுவூட்டல் மற்றும் உயிரூட்டல், மூலிகை யாகம் தொடர்ந்து பூர்ணாஹிதி, மகா தீபாராதனையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.