கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த பனமலை கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீதேவி,பூமி தேவி சமேத சென்ன கேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை மகா பூர்ணாஹூதி யாகம், வேத பிரபந்த சாற்று முறை நடைபெற்றன. நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சென்னகேசவப் பெருமாள் சன்னதி, கருடன், சஞ்சீவி வீர ஆஞ்சநேயர், வள்ளி தேவசேனா, சுப்ரமணியர் சுவாமி ராஜகோபுரம் மற்றும் முன்மண்டப விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணத்தை தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றது.