பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன்னோட்டமாக, ஆழ்வார்கள் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, திருப்பணி தொடங்கி நடந்து வருகிறது. 12 ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்கள் சன்னதிக்கு, இரு மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்து, புதுப்பிக்கும் பணி தற்போது முடிந்தது. நேற்று முன்தினம், ஆழ்வார்கள் சன்னதிக்கு, கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கி, நேற்று காலை நிறைவடைந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீரை, பட்டாச்சாரியார்கள், சன்னதி மற்றும் ஆழ்வார், ஆச்சாரியார்கள் மீது தெளித்து, கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.