பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
திருக்கோவிலூர் : பகவான் யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின், 11ம் ஆண்டு ஆராதனை விழா, நாளை துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. திருவண்ணாமலையில், பகவான் ஆசிரம வளாகத்தில், விழா நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக, நாளை (17ம் தேதி) காலை, 6.30 மணிக்கு ஹோமம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனையும், 11 மணிக்கு, பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 3.30 மணிக்கு, மதுரை மாசானமுத்து குழுவினரின் பஜனையும், தொடர்ந்து, 5 மணிக்கு, குமாரி சிந்துஜா குழுவினர், காஞ்சி மகா பெரியவர் சத் சரித்திரம் இசைக்கின்றனர். இரவு, 7 மணிக்கு, பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் நாளான, 18ம் தேதி, காலை, 6.30 மணிக்கு மகன்யாசம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடக்கின்றன. காலை, 9 மணிக்கு, தபோவனம் பூஜ்ய ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமி முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜை, 11 மணிக்கு, பக்தர்கள் பஜனை, மாலை, 3.30 மணிக்கு, சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 5.15 மணிக்கு, ரமாகாந்த் ராய் எழுதிய, பரமாத்மாவுடன் ஆத்மாவின் சந்திப்பு என்ற, பகவானின் வாழ்க்கை வரலாறு அடங்கிய, இந்தி புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. இரவு, 8 மணிக்கு, பகவானின் உற்சவ மூத்தியுடன் வெள்ளி ரத ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் ஆசிரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.