திருநெல்வேலி:சீவலப்பேரி தோணித்துறை தீர்த்த கட்டத்தில் தாமிரபரணி புஷ்கரணி யாகம் நடந்தது.தாமிரபரணி நல அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு தமிழ் மாதமும் விசாக நட்சத்திரத்தன்று தாமிரபரணியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தீர்த்த கட்டத்தில் ஏதாவது ஒரு தீர்த்தகட்டத்தில் தாமிரபரணி புஷ்கரணி யாகம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை சீவலப்பேரி அருகேயுள்ள தோணித்துறை தீர்த்தக் கட்டத்தில் முத்துமாலையம்மன் கோயிலில் தாமிரபரணி புஷ்கரயாகம் நடந்தது. ஊர் பொதுமக்கள் யாகத்தில் திரளாக கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையின் அருள்வேண்டி பிரார்த்தித்தனர். நதியின் புனித தன்மையையும், நதியின் மேன்மையையும் காக்க உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.யாகத்தில் தாமிரபரணி நல அறக்கட்டளை நிறுவனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நிர்வாக செயல் இயக்குனர் கார்த்தீசன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி, நெல்லை மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பாளை., மண்டல தலைவர் முத்துவேலப்பன், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் கார்மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.