அன்னூர்:சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் திருமுருகன் அருள்நெறிக்கழகம் சார்பில், ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசக விழா நடக்கிறது.நேற்று (நவம்., 26ல்) நடந்த விழாவில், திருமுருகன்பூண்டி சுந்தரராஜ அடிகள் பேசுகையில்,சைவ சமயத்தின், 12 திருமுறைகளில், திருவாசகம் எட்டாம் திருமுறையாக போற்றப்படுகிறது. இறைவனை கசிந்து உருகி பாடும் பாடல்கள் இதில் உள்ளதுபோல், உலகில் வேறெந்த மொழியிலும் இருக்காது, என்றார்.