பதிவு செய்த நாள்
27
நவ
2018
06:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தீபத்திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த, 14ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா தொடங்கி தினமும் காலை, இரவு நேரங்களில், சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 23ல், காலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக தெப்ப உற்சவம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழாவான சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இந்நிலையில், மலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், டிச., 23ல், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.