வால்பாறை: வால்பாறையில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் நடந்த, சங்கடஹரசதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.