பதிவு செய்த நாள்
28
நவ
2018
01:11
நாமக்கல்: தை அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு, சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், டிச., 6ல் கொடியேற்று விழா நடக்கிறது. நாமக்கல், என்.புதுக்கோட்டை அருகில், ஒசக்கோட்டையில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, தொட்டு அப்ப திருவிழா நடந்து வருகிறது.
இந்தாண்டு நிகழ்ச்சி, டிச., 6ல் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு திருமஞ்சனம், மதியம், 12:15 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு ஸ்ரீசக்தி அழைப்பு, 1:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.