பதிவு செய்த நாள்
28
நவ
2018
01:11
கோபி: கோபி, பச்சமலை முருகன் கோவிலில், கோமாதா பூஜை, கோலாகலமாக நேற்று (நவம்., 27ல்) நடந்தது. கோவிலில் வாரந்தோறும் செவ்வாயன்று, கோமாதா பூஜை மற்றும் சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை நடந்து வருகிறது.
நேற்று (நவம்., 27ல்) காலை, மூலவருக்கு அபிஷேகம், தொடர்ந்து, கோமாதா பூஜை நடந்தது. கோவில் கோசாலையில் இருந்து, இரு பசு மாடுகள், ஆகம விதிப்படி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. பெண் பக்தர்கள் வரிசையாக நின்று, பசுக்களின், கொம்புகளுக்கு இடையே, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து வழிபட்டனர். பின் திரிசதை அர்ச்சனை, மகா தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விசேஷ பூஜையில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையால், கோவில் வளாகமே நேற்று (நவம்., 27ல்) விழாக்கோலம் பூண்டிருந்தது.