அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் பால்சுவாமி மடத்தில் குருபூஜை விழா நடந்தது. கோ பூஜை, யாகசாலை பூஜை, பால், பழம், பன்னீர், புஷ்பம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி கொண்டல் சாமி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.