மதுரை தமிழக கோவில்களில் போலி ரசீது ரூ.100 கோடிக்கு மோசடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2018 12:11
மதுரை: தமிழக கோவில்களில் போலி ரசீதுகளால், 100 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ள தாக, திருத்தொண்டர் சபை தலைவர், ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது:அரசு துறைகளில் மிகுந்த வருமானம் ஈட்டும் அறநிலையத்துறை, வருவாயை முறைப்படுத்தி உயர்கல்வி, மருத்துவத்தை இலவசமாக அளிக்க முடியும். தனி வங்கி துவங்கி, கோவில்கள் மேம்பாட்டிற்கு உதவலாம். காவல்துறை தலைவர் தலைமையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் கண்காணித்தால் மட்டுமே கோவில் சொத்துகளை காப்பாற்ற முடியும்.கோவில் சொத்துகளை மீட்க, அந்தந்த கமிஷனருக்கு அதிகாரம் உண்டு. அலட்சியத்தால் தமிழகத்தில், 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்க முடியாத நிலை உள்ளது.
இத்துறையில் ஊழலை ஒழிக்க பணியாளர்கள், அதிகாரிகள் சொத்து விபரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். கோவில்களில் போலி ரசீதுகள் புழங்குகின்றன. இதன்மூலம், 100 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.