பதிவு செய்த நாள்
01
டிச
2018
01:12
திருச்சி: தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு ஆய்வாளர் பாபு, திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகே, கண்ணுகுளம் கிராமத்தில் கள ஆய்வு செய்தார். அப்போது, பழமையான சிவன்கோவிலின் கட்டுமான சிதைவுகள், சிதைந்த நிலையில் சிவலிங்கம் ஒன்று, மண்பாண்ட ஓடுகள், முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இங்கு மண்ணில் புதைந்த நிலையில் யாழி சிற்பங்கள், மனித உருவம் செதுக்கப்பட்ட சிற்பங்கள் காணப்படும் இடத்தில், சிவன் கோவில் புதைந்துள்ளதாக, இந்த கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், இங்கு பல்லவர் கால சிற்பக் கலை அமைப்புடன் அய்யனார் கோவில் உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவி லில், பிற்காலத்தில் வைக்கப்பட்ட சிவலிங்கம் சிதைந்த நிலையில் உள்ளது.
படையெடுப்புகளால், இங்குள்ள சிலைகள் சிதைக்கப்பட்டிருக்கலாம். தொல்லியல் துறை யினர் இங்கு ஆய்வு மேற்கொண்டால், பல வரலாற்று உண்மைகள் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.