சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில், கால பைரவாஷ்டமியை முன்னிட்டு 5 ஆயிரம் ருத்ராட்சங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கால பைரவர் சன்னதியில் 108 குடம் பால் அபிஷேகம் நடந் தது. மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி சிவசுப்ரமணியர் கோயில் தலைமை குருக்கள் ஸ்ரீ ஹரி பகவான் தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விரியன் சுவாமி, நகராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ், தெய்வீகப்பேரவை நிர்வாகிகள் ஜெயராமன், குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கால பைரவருக்கு சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடந் தது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கும், பக்தர்களுக்கும் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது.போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.