பதிவு செய்த நாள்
03
டிச
2018
01:12
விழுப்புரம்:விழுப்புரம் சங்கரமடத்திற்கு காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் நேற்று (டிசம்., 2ல்) இரவு விஜயம் செய்தார்.
விழுப்புரம் திரு.வி.க., வீதியில் அமைந்துள்ள சங்கரமடத்திற்கு நேற்றிரவு (டிசம்., 2ல்) 8.00 மணிக்கு காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரர் விஜயம் செய்தார். இவர் இன்று (3ம் தேதி) கார்த் திகை 3வது சோமவாரத்தை முன்னிட்டு, சந்திரமவுலீஸ்வரருக்கு நடைபெறும் சிறப்பு
வழிபாடுகளில் பங்கேற்கிறார். நாளை 4ம் தேதி பிரதோஷ பூஜைகளிலும் பங்கேற்று, 5ம் தேதி சந்திரமவுலீஸ்வருக்கான பூஜைகளை முடித்து கொண்டு மாலை 4.00 மணிக்கு திருச்சி
அடுத்த திருவானைகாவல் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க செல்கிறார்.இந்த மூன்று நாள் பூஜைகளில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என சங்கரமடம் மேலாளர் அனந்தராமன் தெரிவித்துள்ளார். நேற்று (டிசம்., 2ல்)வந்த விஜயேந்தரரிடம் மகாலட்சுமி ரமேஷ், வழக்கறிஞர் சுப்ரமணியன், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் உள்பட பலர் ஆசிபெற்றனர்.முன்னதாக திண்டிவ னத்தில், மரக்காணம் பிராமணர் சங்க தலைவர் சீனுவாச அய்யர் தலைமையில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.