காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவில் கடை ஞாயிறு விழாவில், மூன்றாம் வாரமான நேற்று (டிசம்., 2ல்), ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்தில் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா நடைபெறும்.
இந்த விழாவில் பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் குணமாக நேர்த்தி கடன் செலுத்துவர். இதற்காக காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கோவிலுக்கு வருவர். முதல் இரு வாரங்களில் கூட்டம் ஓரளவு இருந்தது.
நேற்று (டிசம்., 2ல்) மூன்றாவது வாரம் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.கூட்டத்தை கட்டுப்படுத்த, 75 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த அளவு போலீசார் இருந்தும், போதுமானதாக இல்லை.