பதிவு செய்த நாள்
03
டிச
2018
01:12
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி ஆசிரியர், யோகாசனத்தில் ஒன்றான சிரசாசனம் செய்து, வேதகிரீஸ்வரரை தலைகீழாக வழிபடுகிறார்.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 51;திருக்கழுக் குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர்.காரைக்கால் அம்மையார் வழிபட்டது போல், பாலசுந்தரமும், 13 வயதிலிருந்து, வேதகிரீஸ்வரர் மலைக்கு வந்து, சிரசாசனம் செய்தபடி, சுவாமியை தலைகீழாக வழிபடுகிறார்.
ஓய்வு நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கும், யோகாசனம் பயிற்று வைக்கிறார்.இதுகுறித்து, ஆசிரியர் பாலசுந்தரம் கூறியதாவது: பத்மாசனம், சர்வாங்காசனம், ஹவாசனம், மச்சாசனம், கூர்மாசனம், சக்கராசனம், தனுராசனம், சிரசாசனம் என, 100க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் உள்ளன.
யோகாசனம் செய்வது உடல் நலத்திற்கும், மனத்திற்கும் ஆரோக்கியமானது. இவை, அனைத்து மதத்தினருக்கும், நாட்டவருக்கும் பொதுவானது.மன அமைதிக்கும், அதுகுறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிரசாசனத்தை, 38 ஆண்டுகளாக செய்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.