பதிவு செய்த நாள்
03
டிச
2018
01:12
உத்திரமேரூர்: சாலவாக்கம், சாய் பாபா கோவிலில், பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம்- ஆலப்பாக்கம் சாலையில், ஷீரடி சாய் பாபா கோவில் உள்ளது.
கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இக்கோவிலில், வாரந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகிகின்றன.சாலவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், சாய் பாபாவிற்கு தீபாராதனை செய்து, வழிபடுகின்றனர்.
இக்கோவிலில், ஒரு மாதமாக, மதிய நேர வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். நேற்று (டிசம்., 2ல்), சிறப்பு பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.