பந்தலூர்:பந்தலூரில் நடந்த பாத்திமா மாதா சொரூப பவனி மற்றும் பிரார்த்தனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரான்ஸ் நாட்டில் பாத்திமா மாதா காட்சி தந்து 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இந்தியா கொண்டுவரப் பட்ட பாத்தமா மாதா சொரூபம், அனைத்து தேவாலயங்களிலும் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, சேரம்பாடி புனித அந்தோணியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலை, நேற்று (டிசம்., 2ல்) சேரம்பாடியிலிருந்து பந்தலூருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பந்தலூர் புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலய பங்கு மக்கள் சார்பில், பந்தலூர் இந்திரா நகரில் வரவேற்கப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக தேவாலாயம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு பாதர் வில்சன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், ஒரு வார வழிபாடு செய்யப்படுகிறது. ஊர்வலம் மற்றும் பிரார்த்தனையில் பங்கு மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். காலை, மாலை நேரங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.