பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
திருப்பதி: திருமலை மலைப்பாதையில், பயணம் செய்யும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் டிரைவர்கள், கட்டாயம் ஓட்டுனர் உரிமம் எடுத்து வர வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, அண்டை மாநிலங்கள் மற்றும் ஊர்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களில் வருகின்றனர்.இளைஞர்கள் பலர் இணைந்து, இரு சக்கர வாகனங்களில் வருவதும் வழக்கம். மலைப் பாதையில்
பயணம் செய்யும் இளைஞர்கள் பலர், அதிவேகமாகச் செல்கின்றனர்; அதனால், விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தேவஸ்தானம் நேரக் கட்டுப்பாடு விதித்தது.
என்றாலும், மலைப் பாதையில் அதிவேக பயணம் தொடர்கிறது; இதை தடுக்க, தேவஸ்தான நிர்வாகம், மலைப்பாதையில் இரு சக்கர மற்றும் கார் டிரைவர்கள், தங்களுடன் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் எடுத்து வர வேண்டும் என, அறிவித்துள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டர்.
ஸ்மார்ட் போனுக்கு தடைஆந்திராவில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார், பணியில் ஈடுபடும் போது, ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கூடாது என, அம்மாநில புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால், போலீசாரின் கவனம் சிதறி, பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட
வாய்ப்புள்ளது. அதனால், பணி நேரத்தில், ஸ்மார்ட் போன் பயன்படுத்த, போலீசாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.