சுவாமிக்கு மகேஷ்வர பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. சிவனடியார்கள் சார்பில், கோவில் உட்புறத்தில் நேற்று (டிசம்., 2ல்)மாலை உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டனர். கோவிலில் மதியம் மகேஷ்வர பூஜை நடத்தப்பட்டு, அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.