பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 44ம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று (டிசம்., 2ல்) காலை, 9:00 மணிக்கு, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடம் மற்றும் காவடி ஏந்தி, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பிறகு, திருப்புகழ் பாடி, கோவில் படிகளுக்கு படி பூஜை செய்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு மஹா தீபராதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சஷ்டி குழு தலைவர் காளிமுத்து, திருக்குறள் பேரவை தலைவர் மேலை பழனியப்பன் உள்பட பலர், படி பூஜை விழாவில் பங்கேற்றனர்.