பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, வைசூர் அக்ரஹாரத்தில், முத்தியாளம்மன், மாரியம்மன், காளபைரவேஸ்வர சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (டிசம்.,1ல்) துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு கங்க பூஜை, கலச ஸ்தாபனம், கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், நவக்கிரக ஹோமம், நள்ளிரவு, 3:15 மணிக்கு, விக்ரக பிரதிஷ்டை மற்றும் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று (டிசம்., 2ல்) காலை, 5:00 மணிக்கு கலச ஆராதனை, நவக்கிரக பூஜை மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, தளி எம்.எல்.ஏ., பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.