பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
திருவண்ணாமலை: பகவான் யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழாவில், அவரது திருவுருவ சிலையுடன், பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், அவரது நூற்றாண்டு ஜெயந்தி விழா, ஓராண்டு கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நிறைவு நாளான நேற்று, பகவான் யோகி ராம்சுரத்குமார் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அவரது திருவுருவ சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மேள தாளம் முழங்க, இரண்டு யானைகள் முன்னே அணிவகுத்து செல்ல, 14 கி.மீ., தூரம் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, யோகி ராம்சுரத்குமாரை போற்றி, பாடியபடி பக்தர்கள் சென்றனர். முரளிதர சுவாமி, அறங்காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் உடன் சென்றனர்.