பதிவு செய்த நாள்
03
டிச
2018
02:12
ஆத்தூர்: மிலாடி நபி விழாவையொட்டி, சுன்னத் ஜமாத் சார்பில், ஆத்தூர், புதுப்பேட்டை, மதர ஸாயே பாருக்கே சித்திக்கியா மதராஸாவில், கந்தூரி விழா, நேற்று (டிசம்., 2ல்) கொண்டாடப் பட்டது. அதில், உலக அமைதி, அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ, ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.