பதிவு செய்த நாள்
04
டிச
2018
01:12
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு முன்னிலையில் நேற்று (டிசம்., 3ல்)நடந்தது.
கோவிலில் உள்ள, 15 உண்டியலில் இருந்து, 7 லட்சத்து 97 ஆயிரத்து 696 ரூபாய் காணிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 64 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளியும் இருந்தன.கோவிலில் உள்ள காசி கிணற்றில் நீர் நிரம்பியதால், பக்தர்கள் காணிக்கை செலுத்தாத வகையில், கோவில் நிர்வாகிகள், துணியால் கிணற்றை மூடியிருந்தனர். இதனால், காணிக்கை நோட்டு, தண்ணீரில் நனைந்தது.இந்நிலையில், அதிலிருந்த காணிக்கையும் எண்ணப்பட்டது. அதில், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 375 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் சேகர் உட்பட பலர் இருந்தனர்.