பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
அனந்தநாக்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா தேவி கோவிலுக்கு செல்ல, சிறப்பு பாதை அமைக்க வேண்டும் என, காஷ்மீர் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடக்கிறது. இங்கு, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லை பகுதி அருகில், நீலம் நதிக்கரையில் உள்ள சாரதா என்ற கிராமத்தில், சாரதா தேவி பீடம் அமைந்துள்ளது.
பழங்காலத்தில், கல்விக்கான மிகப் பெரிய மையமாக, இந்த பீடம் இருந்தது.தெற்காசியாவில், பிரசித்தி பெற்ற, 18 கோவில்களில், சாரதா தேவி கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள இந்த கோவிலுக்கு, காஷ்மீரை பூர்விகமாக உடைய பிராமண சமூகத்தை சேர்ந்த பண்டிட்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.சமீபத்தில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்திலிருந்து, பாகிஸ்தானில், சீக்கிய குருவான குருநானக்கின் நினைவிடம் உள்ள கர்தார்பூர் வரை, சிறப்பு பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, சாரதா தேவி கோவிலுக்கு செல்ல, சிறப்பு பாதை அமைக்க வேண்டும் என, அனந்தநாக் மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட, காஷ்மீர் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.