பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
சென்னை: தைப்பூச விழாவையொட்டி, மேல்மருவத்தூரில், 11 ரயில்கள் நின்று செல்லும். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் கோவிலில், தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா, நாளை துவங்கி, ஜன., 20ம் தேதி வரை நடக்கிறது.இதையொட்டி, முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள், மேல்மருவத்தூரில், ஒரு நிமிடம் நின்று செல்ல, ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை, எழும்பூரில் இருந்து இயக்கப்படும், ராக்போர்ட், வைகை, பாண்டியன், நாகர்கோவில், மன்னை, மதுரை, செங்கோட்டை பொதிகை ரயில்கள், இரு வழியிலும், நாளை முதல், ஜன., 21ம் தேதி வரை, மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.அதேபோன்று, புவனேஸ் வரம் - ராமேஸ்வரம், தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா, மும்பை - மதுரை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில்களும், இரு வழியிலும் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.