கயத்தாறு : கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவில் அன்னையின் தேர்ப்பவனி நடந்தது. கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நவநாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலையும் தொடர்ந்து திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசியும் வழங்கப்பட்டது. அசனவிருந்து நடந்தது. அன்னையின் திருவிழா 10 நாட்கள் நடந்தது. 12ம் தேதி லூர்து அன்னையின் உருவ தேர்ப்பவனி நடந்தது. வடக்குத்தெரு சுடலைமாடன்கோவில் தெரு, சர்ச்தெரு வீதிகளில் தேர்ப்பவனி நடந்தது. 13ம் தேதி பங்குத்தந்தை பீற்றர் தலைமையில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகø ள பங்குத்தந்தை பீற்றர் திருத்தொண்டர் அந்தோணிராஜ், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை மற்றும் இறைமக்கள் ஆகியோர் செய்தனர்.