குளித்தலை: குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்வாமி திருத்தேர் மற்றும் அம்பாள் திருத்தேர் புதியதாக செய்ய 44 லட்ச ரூபாய் மதிப்பில் அனுமதி வழங்க கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கடம்பனேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்வாமி மரத்தேர் மற்றும் அம்பாள் திருத்தேர்கள் புதியதாக செய்ஐ, தேரோட்டம் நடத்த வேண்டும் என சிவனாடியார் மாணிக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற கோவிலான குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி மரத்தேர் புதியதாக செய்ய 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மற்றும் அம்மன் மரத்தேர் புதிதாக செய்ய 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கமுத்து தெரிவித்தார்.