பதிவு செய்த நாள்
17
பிப்
2012
11:02
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் மற்றும் புகளூரில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும் 20ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.புகளூர் மேகப்பாலீஸ்வரர் கோவிலில்வரும் 19 ம் தேதி இரவு 8.00 மணிக்கு தொடக்க பூஜையும், 20 ம் தேதி மாலை 4.00 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 8.00 மணிக்கு புண்யாகவாசனம், முதல்கால பூஜை, அபிஷேகம், தீபாராதனையும், இரவு 10.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அபிஷேகமும் நடக்கிறது.வரும்21ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அபிஷேகமும், அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால பூஜை, அபிஷேகம், அதிகாலை 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், 16 தீப தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. டி.என்.பி.எல்., திருமண மன்டபத்தில் ஈஷா யோகமையத்தின் சார்பில் வரும் 20ம் தேதி மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.