உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 20ம் தேதி சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி அன்று மாலை 6 மணியளவில் உலக நன்மைகள் வேண்டி கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.