பதிவு செய்த நாள்
17
பிப்
2012
11:02
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு அடிகளார் அவதார விழாவையொட்டி, பாலக்கோடு திரவுபதியம்மன் கோவில் திடலில் கலச விளக்கு வேள்வி பூஜைகள் நடந்தது.பூஜையை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.ஆர்.அன்பழகன், யூனியன் சேர்மன்கள் கருணாகரன், தமிழ்செல்வி, டவுன் பஞ்சாயத்து தலைவர் மகேந்திரன், சத்யா அசோக்குமார், கலைமணி பாலசுப்பிரமணியம், சங்கர், கோவிந்தசாமி, முருகேசன், புதார் சுப்பிரமணி, பாலகிருஷ்ணன், கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக இயக்க நிர்வாக குழு தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். பொருளாளர் ஸ்ரீராமுலு, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் மல்லிகா மாதன், ஆனந்தன், அசோகன் ஆகியோர் வேள்வி பூஜையை முன்னின்று நடத்தினர். அடிகளார் அவதாரம் குறித்து கந்தன், சண்முகம் ஆகியோர் பேசினர். ஓம்சக்தி கொடியை தர்மகர்த்தா ராஜிகவுண்டர், ஊர் கவுண்டர் ராஜகோபால், மந்திர கவுண்டர் மாதையன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். வேள்வி தொண்டு குறித்து வேள்விக்குழு செயலாளர் மகாலிங்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு, புத்தகம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.ஐ., சீனிவாசன் ஆகியோர் ஏழை பெண்களுக்கு ஆடை தானம் செய்தனர். வட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.