பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
சென்னை: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதியின் சார்பில், உலக நன்மைக்காக, பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட உள்ளன.இதுகுறித்து, அந்த அமைப்பினர் கூறியதாவது:சென்னை, மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வரும், ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதி, ஆரியகவுடா தெருவில் உள்ள, அயோத்தியா மண்டபத்தில், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
உலக மக்களுக்கு, அனைத்து வித நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நாளை காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, பலவித சிறப்பு ஹோமங்கள் நடத்தப் படுகின்றன.
நாளை மறுநாள் (டிசம்., 9), காலை, 9:00 மணி முதல், சாஸ்தா பிரீதி பூஜையும், மாலை, 7:00 மணிக்கு, கோவை ஜெயராமனின் நாம சங்கீர்த்தனமும் நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு, 98410 71793 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.