புதுச்சேரி:நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பம் குரு சித்தானந்தர் கோவிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது.கார்த்திகை மாதம் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, கருவடிக்குப்பம் குரு சித்தானந்தர் கோவிலில் 108 சங்காபிஷேகம் விழா காலை 6.00 மணிக்கு சங்கு பிரதிஷ்டையுடன்துவங்கியது. 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 9 மணிக்கு, குருக்கள் தேவசேனாதிபதி தலைமையில் குரு சித்தானந்தா சுவாமிக்கு108 சங்காபிஷேகம்நடந்தது.பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இரவு 9 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடந்தது.நிகழ்ச்சியில் கோவில் தனி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன்,குருக்கள் சேது,சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.